அன்பு நண்பரகளே,வணக்கம்.
19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்-பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த அறிவியல் மாநாட்டிற்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகமும் கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களும்,கல்லூரி அலுவலர்களும்,ஊழியர்களும் குறிப்பாக உணவு வழங்கல் பொறுப்பு மற்றும் மருத்துவ உதவிக்கென, HELP LINE என வழிகாட்டியாகச் செயல்பட்ட பேராசிரியப்பெருமக்களும்,மிகச்சிறப்பாக செயலாற்றி அறிவியல் மாநாடு எவ்வித தொய்வும் இன்றி தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தந்து இருந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவக் கண்மணிகள் இல்லை!இல்லை!! இளம் விஞ்ஞானிகள் அனைவரும் உணவு,தங்குமிடம்,உதவி,வழிகாட்டி,மருத்துவ வசதிமற்றும் போக்குவரத்து வசதி உட்பட உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்திலும் முழு மன நிறைவும் அதை சமயம் ஆச்சரியமும் அடைந்தனர்.
மாநாடு பற்றிய சில புகைப்படங்கள் இதோ..
(01) சமூகப்பணியாற்ற வருகை தந்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உடன் இரண்டு பேராசிரியர்கள்..
(02) மாநாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு உறைவிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவையில் நிறைவினை அளிக்கும் விதமாக , கணக்கெடுக்கும் சேவையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள மற்றும் பேராசிரியப் பெருமக்கள்....
(03)பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் வானூர்திக் கல்வி பயில வைத்திருக்கும் அழகிய வானூர்தி ஒன்று.....
(04) பண்ணாரி அம்மன்தொழில்நுட்பக்கல்லூரியின் உள் பாதையில் ஒரு பகுதி....
05) தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்த அறிவியல் மாநாட்டு சம்பந்த நீதியரசர்கள்,முனைவர்கள்,பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,இன்னும் பல முக்கிய பங்கேற்பாளர்கள் மூன்று நாட்களும் தங்க பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் தங்கள் பார்வைக்காக ஒன்று......
(06) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வெற்றிபெற முக்கிய பங்காற்றிய ஈரோடு மாவட்ட TNSF பொருளாளர் திரு; கார்த்திக்- ஆசிரியர் அவர்களது இருசக்கர வாகனம் மற்றும் தங்கும் விடுதி.......
(07) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு துவக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலத் தலைவர் டாக்டர்; ந.மணி அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.......
(08) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டினை மரியாதைக்குரிய S.பன்னீர் செல்வம் IPS அவர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்க உரை நிகழ்த்திய காட்சி....
(09) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் (2011) இந்த ஆண்டு ஆய்வுக்கான தலைப்பு அதாவது
''நில வளம்;
வளத்துக்காகப்பயன்படுத்துவோம்,
வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்''
என்ற தலைப்பின் கருப்பொருள் விளக்க உரை மரியாதைக்குரிய பேரா.சோ.மோகனா அம்மையார் அவர்களது உரையாற்றிய காட்சி.....
(10) அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவில் முன்னிலை வகித்த மற்றும் இந்த மாநாடு மிகச்சிறப்பாக வெற்றி பெற பல்வேறு வகைகளிலும் உறுதுணை புரிந்த பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி இயக்குநர்- மரியாதைக்குரிய ;Dr.S.K.சுந்தரராமன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி......
(11) மாநாட்டின் இடையே அடுத்த ஆண்டுக்கான கற்கும் பாரதம் அதாவது SAKSHAR BHARAT STATE LEVEL -ல் எவ்வாறு செயல்படுத்துவது என திட்டமிட கலந்துரையாடல் நிகழ்வில் TNSFமாநிலத் தலைவர் டாக்டர். ந. மணி அவர்கள் திட்டத்தினை விளக்கி பொறுப்பாளர்களை கருத்து கேட்டறிந்த காட்சி...
(12) மாநாட்டில் சமர்ப்பித்த இளம் விஞ்ஞானிகள் மற்றும் பிற விபரங்கள் பற்றிய ஆய்வுகளை மரியாதைக்குரிய பேரா.சோ.மோகனா,அம்மையார் உட்பட அறிஞர் பெருமக்கள் கோப்புகளை ஆய்வு செய்யும் காட்சி......
(13) பசி வந்தால் பத்தும் பறந்து போகும்'' என்பார்கள்.எதுவும் பறந்து போகாமல் இருக்க பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி நிர்வாகம் செய்த உணவு ஏற்பாட்டினை கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் உணவு பரிமாறி மிகச் சிறப்பாக சேவை செய்யும் காட்சி.....
(14) உணவு வழங்கலில் எவ்வித தொய்வும் ஏற்படாமலிருக்க உடனிருந்து உணவு பரிமாற வழிகாட்டும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியின் மரியாதைக்குரிய பேராசிரியர் அவர்கள் பரிமாற்றக்குழுவுடன் இணைந்து கௌரவம் பாராமல் சேவைபுரியும் காட்சி......
(15) கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கருத்தாக சேவை புரியும் காட்சி......
(16) மரியாதைக்குரிய பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரிப் பேராசிரியர் அவர்கள் உணவு வழங்கலை கவனமுடன் கண்காணிக்கும் காட்சி......
(17)தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள 1500 க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள்,மாணவர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,முக்கிய பிரமுகர்கள், என பலரும் மகிழ்வோடு உணவருந்தும் காட்சியில் ஆடவர் பகுதி மட்டும் இங்கு.......
(18)சேவை புரிய வருகை புரிந்துள்ள கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் உணவருந்தும் வேளையில் மாணவத்தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் Dr.N. MANI அவர்கள் , மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர்& மாநில மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R.MANI. அவர்கள் ......
(19) மாநாட்டில் பங்கேற்க வருகை புரியும் அனைவருக்கும் வழிகாட்டும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவத் தொண்டர்கள் பணியில்..........
(20) கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உணவு பரிமாறுதல் சேவையில் கண்காணிக்கும் கோபி கலை&அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்கள்.......
(21)தேநீர் இடைவேளை நேரங்களில் சேவை புரியும் கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கோபி கலை & அறிவியல்கல்லூரி பேராசிரியர்கள் பணியில்........
(22)மாநாட்டில் வருகை புரிபவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி அரங்கு. இங்கு K.S.Rangasamy College Of Technology (திருச்செங்கோடு)- பொறியியல் மாணவர் திரு; R.வினோத் B.E (Second Year) புத்தக அரங்கில் சமூகப்பணியாற்றும் காட்சி.....
(23) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல்மாநில மாநாட்டில்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.ஈரோடு மாவட்ட பொருளாளர் திரு; கார்த்திக் (ஆசிரியர்)புகைப்படம்,காணொளி ஒளிப்படம் இயக்குதல்,என குழந்தைகளுக்கு அறிவியல் காட்சிகளை தொழில்நுட்பம் வாயிலாக மாநாட்டு அரங்குகளில் வழங்கி கண்காணித்து சேவைபுரிந்த காட்சி.....
(24) மாநாட்டில் புத்தக அரங்கில் வருகை புரியும் அனைவரையும் கண்காணித்து இந்த புத்தக அரங்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.என அனைவரையும் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தூண்டும் செயற்குழு உறுப்பினர் மற்றும் புகைப்பட வல்லுனர் திரு;வேலுமணி - சத்தியமங்கலம் அவர்கள் பணியில்.....
(25) மாநாட்டிற்கு வருகை புரிந்தசேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் திரு;G.சுரேஷ் அவர்கள் புத்தக கண்காட்சி அரங்கில் உதவி புரிந்த காட்சி......
(26) மாநாட்டுப்பணிகளை பார்வையிட்ட மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R.மணி அவர்கள் மற்றும் பார்த்திபன் அவர்கள் ......
(27) மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ள தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்களில் (KANNADA -மொழி வழி பயிற்றுனர்கள்) இருவர் இங்கு............
(28) மாநாட்டில்கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவத் தொண்டர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என விளக்கவுரை நிகழ்த்தும் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் -TNSF திரு;R. மணி அவர்கள் உரை நிகழ்ச்சி............
(29) மாநாட்டில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் கோபி கலை & அறிவியல் மாணவர்களின் சேவை புரியும் காட்சி. அவர்களை கண்காணிக்கும் கோபி கலை &அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சேவையில்...........
(30) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் புத்தக அரங்கில் சேவையாற்றும் மாணவர் திரு ;R.வினோத் K.S.Rangasamy College Of Technology (திருச்செங்கோடு)- மற்றும் திரு ; கோகுல் அவர்கள் சேவையில்......
(31) 19-வது தேசிய குழந்தைகள் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி புத்தக கண்காட்சி அரங்கில் சேவை புரியும் காட்சி......
(32) குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புத்தக கண்காட்சி அரங்கினை காணொளி பதிவு செய்யும்
NCSC-மாநிலப் பொறுப்பாளர்கள்........
(33) குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் சேவையாற்றும் திரு;சந்திரன் மற்றும்
கோபி கலை& அறிவியல் கல்லூரி மாணவி பணியில்...........
(34) குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் வாசிப்புத்திறனை மேம்படுத்த அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் TNSF-மாநிலத் தலைவர்Dr.N. மணி -அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் & மாநில மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R. மணி- அவர்கள் ........
(35)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டத் தலைவர் உமா சங்கர் அவர்கள் புத்தக அரங்கில் சேவை புரியும் கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தும் காட்சி.....
(36)மாநாட்டு புத்தக அரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டப் பொருளாளர் மற்றும் மாவட்டச்செயலாளர் & மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர்.....
(37) மாநாடு நடத்த எவ்வாறு நமது பணி அமைய வேண்டும் என விளக்கும் மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் மணி அவர்கள்...ஆர்வமுடன் கேட்கும் கோபி கலை& அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.....
(38)அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற ஒத்துழைத்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு;K. ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு;N.நடராஜன் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்......
(40) அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற ஒத்துழைத்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு;K.சரவணக்குமார் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு;Dr.N.மணி அவர்கள்-மாநிலத்தலைவர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தமிழ்நாடு.......
(41)
அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற சிறப்பான உழைப்பினை நல்கிய கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களில் ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு.N.வேலுமணி அவர்கள்-செயற்குழு உறுப்பினர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்...
(42) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சமூக சேவை புரிய வாய்ப்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்,கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு K.RAJENDRAN,Asstant Professor In Management-GOBI ARTS & SCIENCE COLLEGE அவர்கள்.
(43) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஒருவர் உரையில் சமூக சேவை புரிய வாய்ப்பளித்து தமக்கு சேவை மனப்பாங்கினை அளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்....-GOBI ARTS & SCIENCE COLLEGE அவர்கள்.
43) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் K.S.Rangasamy college Of Technology-Tirenchengodu-Namakkal-District -கல்லூரி மாணவர் திரு.R .வினோத் அவர்கள் உரையில் சமூக சேவை புரிய வாய்ப்பளித்து தமக்கு சேவை மனப்பாங்கினை அளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்...