வாழு,வாழவிடு.

திங்கள், 31 அக்டோபர், 2011

NCSC-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.

அன்பு நண்பர்களே,வணக்கம். வருகிற நவம்பர் மாதம் 19-ந்தேதி சென்னிமலை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக நடத்தப்படுகிறது.10 வயது முதல் 17 வயது வரையுள்ள ஆர்வமுள்ள அனைத்துக் குழந்தைகளும் கலந்து கொள்ள வருக! வருக!! என வரவேற்கிறோம்.
       TAMILNADUSCIENCEFORUMTHALAVADI.BLOGSPOT.COM

சனி, 29 அக்டோபர், 2011

BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY - SATHYAMANGALAM-ERODE DISTRICT

       மரியாதைக்குரிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகம்- சத்தியமங்கலம்-அவர்களுக்கு ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு  சார்பாக வணக்கம்.
       அறிவியல் மக்களுக்கே!,அறிவியல் நாட்டிற்கே!! அறிவியல் சுயசார்பிற்கே!! என்ற குறிக்கோளில் எவ்வித இலாப நோக்கமுமின்றி பொதுநலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு 

        எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள்,அறிவியல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக அமைப்புகள்,ஆசிரியப் பெருமக்கள்,மாணவ,மாணவியர்கள்,அரசு நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள்,என சாதி,மத,இன,மொழி,பாலியல் வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்'' 
     2011-ம் வருட மாநில மாநாடு வருகிறநவம்பர் மாதம்   24, 25,26,- தேதிகளில் மூன்று நாட்கள் நடத்திக்கொடுக்க இசைவு தெரிவித்தமைக்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகம்-சத்தியமங்கலம் -ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

     


TAMILNADUSCIENCEFORUMTHALAVADI.BLOGSPOT.COM.--DATE; 30-10-2011SUN DAY

திங்கள், 17 அக்டோபர், 2011

THALAVADI-உள்ளாட்சித்தேர்தல்-2011

அன்பு நண்பர்களே, வணக்கம்.

      17-10-2011 இன்று  உள்ளாட்சித்தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு  தாளவாடிஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 72 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்றது.அனைத்தும் மலைக்கிராமங்கள் ஆதலால் போக்குவரத்துக்கு மிக சிரமமாக இருந்தும் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளையிலிருந்து சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டன.சத்தி,தாளவாடி,கேர்மாளம்,கோட்டாமாளம்,தேவர்நத்தம்,
குளியாடா,கோட்டாடை,கெத்தேசால்,ஆசனூர்,திம்பம்,பெஜலட்டி,மாவநத்தம்,
எல்லக்கட்டை,பாரதிபுரம்,காஜனூர்,கல்மண்டிபுரம்,ஜீரஹள்ளி,கொங்கள்ளி,

 பனகஹள்ளி,கெட்டவாடி,மல்லன்குழி,பைனாபுரம்,அருள்வாடி,சூசைபுரம்,
 நெய்த்தாளபுரம்,தலமலை,தொட்டபுரம்,கோடிபுரம்,சிக்கள்ளி,இக்கலூர், உள்ளிட்ட பல ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டன.







       




     



    

வியாழன், 13 அக்டோபர், 2011

ஒரு நாளின் காலம் 4மணி

                நமது நாளின் நீளம் -பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 24மணிநேரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த காலம் மாறிவரும் சூழல் உடையது.அதாவது நம் நாளின் நீளம்1,20,000ஆண்டுகளுக்கு ஒரு விநாடி காலம் கூடுகிறது.அதாவது பூமியின் சுழல்வேகம் படிப்படியாகக் குறைகின்றது.இதற்குக்காரணம் சந்திரன் நம் கடல்களில் எழுப்பும் அலைகளே என்பதை சர் சார்சு டார்வின்(Sir George Darwin) விளக்கினார்.திங்கள் தனக்கு நேராக உள்ள பூமியின் முற்பகுதியை வன்மையாகவும்,நேர் மறுபுறம் உள்ள (பூமியின்) பிற்பகுதியை  மென்மையாகவும் கவர்ந்து இழுக்கிறது. திங்களின் இழுப்பாற்றலில் உள்ள இத்தகைய வேறுபாட்டின் காரணமாகப் பூமியில் முன்னும்பின்னுமாக உள்ளகடல்களில் இரண்டு பேரலைகள் எழும்புகின்றன.பூமி,சந்திரன் நகர்வதை விட விரைவாக- மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் இந்த அலைகள் சந்திரனை நோக்கியபடியே கிழக்கிலிருந்து மேற்காக நகருகிறது.இவ்வாறு பூமி சுழலும் திசைக்கு எதிர்த்திசையில் அலைகள் நகர்வதால் பூமியின் சுழல் வேகத்திற்கு தடையாக அமைந்து சுழற்சியைக் குறைத்து வருகின்றன.பூமியின்  சுழலும் வேகம் குறைவதால் நமது நாட்காலம் வரவர நீண்டுகொண்டே செல்கிறது.

        இன்று நம் நாளின் காலஅளவு 24மணி.சந்திரன் இருக்கும் தொலைவு 238840 மைல்.நம் மாதத்தின் காலஅளவு அதாவது சந்திரன் பூமியைச் சுற்றிவரும் காலம்27.4நாட்கள்.திங்கள் தோன்றிய ஏறத்தாழ 2000,000,000,000ஆண்டுகளுக்கு முன்னர் திங்கள் விலகிச் செல்கிறது என்கின்ற அடிப்படையில் காலத்தை எதிர்த்து பின்னோக்கி சென்று பார்த்தால் நம் நாளின் காலஅளவு 4மணி அளவுதான் இருக்கவேண்டும் என்று அறிகிறோம்.அப்பொழுது திங்கள் ஏறத்தாழ 9000மைல் தொலைவில் இருந்தபடி 4-மணிக்காலத்தில் நம் பூமியை விரைந்து சுற்றி இருக்க வேண்டும்.அதாவது நம் நாளின் காலஅளவும்,மாதத்தின் கால அளவும் ஒரே அளவாக அதாவது 4-மணி என்று இருந்தன.மேலும் அக்காலத்தில் சந்திரன் பூமிக்கு அருகில் இருந்ததால் அதன் ஈர்ப்பு விசையால் கடலில் மிகப்பெரிய அலைகளை எழுப்பி அவற்றின் ஆற்றலால்,இன்று விலகி ஓடுவதைவிட விரைந்து ஓடிஇருக்கவேண்டும்.
  திங்கள் நான்கு அடித்தொலைவு விலக நூறுஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
   இப்படியாக திங்கள் தன்பாதைவட்டத்தை விரிவாக்கிக்கொண்டு செல்வதற்கும் முற்றுப்புள்ளிவைக்க  ஒரு காலத்தில் ஒரு எல்லைவந்து சேரும். திங்கள் பூமியிலிருந்து 3,40,000 மைல் தொலைவிற்கு விலகிநிற்கும். அப்போது நமது நாட்காலமும்,மாதமும் ஒரே அளவினதாக அதாவது 47 நாட்களாக இருக்கும்.அப்போது இன்றுபோல் 24மணிநேரத்தில் இரவும் பகலும் மாறிமாறி வருவது போய் மிக நீண்டகாலம் கொதிக்கும் பகலாகவும்,மிகநீண்டகாலம் குளிர்ந்து நடுங்கச்செய்யும் இரவாகவும் பூமியில் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்.இந்த நிலை-திங்களும் பூமியும் ஒரேவேகத்தில் சுழலும்நிலை வந்துவிட்டால் பூமியில் திங்கள் எழுப்பும் கடல் அலைகள் கடற்பரப்பில் நகரவேண்டிய தொல்லை இல்லாமல் போகும்.அப்போது அவை சுழலும் பூமியை தடுத்து நிறுத்தும் தடையாகவும் செயல்படாமல் போகும்.எனவே,திங்கள் பூமியை விட்டுவிலகிச் செல்லாமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

திங்கள், 10 அக்டோபர், 2011

தொழில்நுட்பம்- எலக்ட்ரானிக் பொருட்கள்-கணிணி பாகங்கள்


அன்பு நண்பர்களே,வணக்கம். இங்கு எனது கணிணி மற்றும் பென் டிரைவ் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியனவற்றைப் பிரித்து படம் பிடித்து பதிவிட்டுள்ளேன்.



மேலே காண்பது ஆம்ப்ளிபயர்
கீழே காண்பது  யூ எஸ் பி அசெம்பிள்

மேலே காண்பது பென் டிரைவ்-(பாகம் அறிந்துகொள்ள உடைக்கப்பட்டது)
கீழே காண்பது  கணிணி- மதர் போர்டு ,ஹார்டு டிஸ்க், SMPS













ஞாயிறு, 9 அக்டோபர், 2011

காற்று வெளி மாசுபாடு


அன்பு நண்பர்களே, வருக,வருக, வணக்கம்.


காற்று வெளி மாசுபாடு
Air Pollution
Industrial Pollution
Air Pollution
தொழிற்சாலை மாசுபாடு
மின் உற்பத்தி
கட்டிடத் தகர்ப்பு


     காற்று வெளி மாசுபாடு என்பது வளிமண்டல பகுதியில் ஏற்படும் சீர் குலைவின் அறிகுறியாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு
  • வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள்
  • வேதிப் பொருட்களின் செறிவு நிலை
  • பல்வேறு / வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் சிதறும் / வீணாகும் தன்மையானது உட்கொள்ளும் தன்மையை விட குறைவாகவே உள்ளது (கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சி)
  • புதிய வேதி வினையின் எதிர் செயல் மற்றும் உயிர் சிதைவற்ற பிரிவின் தோற்றம்
  • உலக வெப்பமயமாதல் அமில் மழை, புகை மூட்டப்பனி, ஓசோன் செறிதளர்வு போன்றவை காற்று வெளி மாசுபாட்டின் தாக்கமாகும்.
சிமெண்ட் தொழிற்சாலை மாசுபாடு
வாகன மாசுபாடு
கார் / கரி எண்ணெயின் வெப்பம்
     
 
      நம் தினசரி வாழ்க்கையுடன் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியானது தொடர்புடையதாகும். இந்த இரண்டு சுழற்சியும் மிக முக்கியமானதாகும்.              
        இவை நம் பூமியில் கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் தொகுப்பினை ஒழுங்குபடுத்துகிறது.

    ஆதாரங்கள் மற்றும் முறைகள்

முக்கிய ஆதாரங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் வாகனத்தின் புகை
  • வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்
  • தொழிற்சாலை இயக்கமுறை
  • வாகன தயாரிப்பு
  • உரங்களின் தொகுதி
  • கட்டிடத் தகர்ப்பு
  • திடக் கழிவு மாசுபாடு
  • திரவத்தின் நீராவி
  • எரிமலை குழம்பு
  • எரி பொருள் உற்பத்தி
  • சாலை கட்டமைப்பு
  • மின்சார உறுப்பு உற்பத்தி
  • உலோகம் பிரித்தெடுத்தல்
  • காட்டுத் தீ
  • வேளாண்மை
காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு
  • இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது
  • நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்
  • கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்
  • ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்
  • இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்
காற்று வெளி மாசுபாடு
  • சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்
  • செயற்திறனின் அளவினை குறைத்தல்
  • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
  • அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்
  • நரம்பு நடத்தையில் பாதிப்பு
  • இரத்த நாடியில் பாதிப்பு
  • புற்றுநோய்
  • முதிர்ச்சியற்ற இறப்பு
காற்று வளி மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு
  • ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றது.
  • காற்று மாசுபாட்டினால் வளிமண்டல ஒஓசோன் படலத்தின் மேல் படலத்தில் தாக்கம் ஏற்படும் அதிகப்படியான புறஊதாக்கதிர்கள் சூரியனிடமிருந்து புவிக்கு வருவதால் உலகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது
  • ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது
காற்று மாசுபடுதலினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்
Air Pollution
Air Pollution
அமில மழையினால் அழியும் மரங்கள்
  • அமில மழையினால் மரங்கள் அழிந்து தாவரங்களின் இலைகள் அழிந்து மற்றும் மண்ணினை உரங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்தற்றதாக மாற்றுகிறது
  • ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டையினால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துவிடுகின்றது
  • ஓசோனின் கீழ் படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை தாக்குதலால், தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் இவை தாவரங்களின் திசுக்களை நேரடியாக அழிக்கிறது
காற்று மாசுக்கள்
காற்று மாசுபட காரணமான வாயுக்கள்

காற்று மாசுபட காரணமான முக்கியமான வாயுக்களின் வகைகள் பின்வருமாறு:
  • சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2)
  • நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (NOX = NO + NO2)
  • ஓசோன் (O3)
சல்பர் - டை - ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு போன்றவை முதன்மை நிலை காற்று மாசுபடுத்திகளாகும். ஓசோன் இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.
SO2 - ன் ஆதாரங்கள்
  • ஆற்றல் உற்பத்தி
- மின் உற்பத்தி
- பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
- மற்ற எரியக்கூடிய பொருட்கள்
  • வாணிகம் மற்றும் குடியிருப்பு பயன்பாடு
  • தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
  • உற்பத்தி இயக்குமுறை
  • தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
  • போக்குவரத்து
- சாலை போக்குவரத்து
- மற்ற போக்குவரத்து (விமானம், கப்பல், இரயில்கள்)
எரிபொருள் மட்டும் கொஞ்ச நைட்ரஜனை உற்பத்தி செய்கிறது. (எடுத்துக்காட்டாக, எண்ணெய் மற்றும் நிலக்கரியில் - 0.5 - 1.5% நைட்ரஜன் உள்ளது) எரிவாயுவில் நைட்ரஜனின் தன்மை எரிபொருளை விட குறைவாகவே உள்ளது. வளிமண்டல நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்கள் எரிக்கும் அறையில் வினைபுரிந்து பெரும்பாலான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
  • நைட்ரிக் ஆக்ஸைடு (NO) அல்லது நைட்ரஜன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) போன்ற இரண்டு முக்கிய நைட்ரஜன் ஆக்ஸைடுகளில் மொத்தம் NO க்கு சமமாகம்
  •  நைட்ரிக் ஆக்ஸைடு (NO) ஒரு நிறமற்ற வாயுவாகும். நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) ஒரு பழுப்பு சிகப்பு கலந்த நிறத்தினை கொண்டும் அதிக நெடியுடனும், நாற்றத்துடனும் கொண்ட வாயுவாகும்.
ஆதாரங்கள்
1. எரிபொருட்களை எரிக்கும் போது NO2 மற்றும் NO ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 90 சதவிகித NOx எரிப்பு பொருளானது NO ஆக இருக்கும். இவை காற்றில் ஆக்ஸிஜனேற்றமடைந்து நைட்ரஜன் - டை - ஆக்ஸைடாக NO2 மாறுகிறது. ஆகையால் வளிமண்டலத்தில் NO2 - ன் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இவை நேரடியாக வெளியேற்றப்படுகிறது. எஞ்சியிருப்பவை வளிமண்டலத்திலே வேதி வினையில் செயல்படுகிறது.
2. சாலை போக்குவரத்தானது பாதி நைட்ரஜன் வெளியேற்றத்தில்   பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி 20%  நைட்ரஜனை வெளியேற்றுகிறது.
  • சாலை போக்குவரத்து
  • மற்ற போக்குவரத்து
3. ஆற்றல் உற்பத்தி
  • மின் உற்பத்தி
  • பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
  • மற்ற எரியக்கூடிய பொருட்கள்
4. தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
5. உற்பத்தி இயக்குமுறை
6. தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெதுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
 
நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றத்தின் இயற்கை ஆதாரங்கள்
 
Air Pollution
மண்ணிலிருந்தும் நைட்ரிக் ஆக்ஸைடு் (NO) வெளியேற்றுகிறது.

 
  அமோனியா வெளியேற்றத்தின் ஆதாரங்கள்
 
Air Pollution

அமோனியா வெளியேற்றத்திற்கு வேளாண்மை ஒரு முக்கிய ஆதாரமாகும். கால்நடை வளர்ப்பு பண்ணை மற்றும் இவற்றின் தேவையற்ற கழிவுகளிலிருந்து அதிக அளவு அமோனியா வெளியேற்றப்படுகிறது. அதிக கால்நடை கழிவுகளில் மட்கும் யூரியா மற்றும் கோழிக் கழிவுகளின் யூரிக் அமிலம் போன்றவற்றினால் அதிக அமோனியா வெளியேற்றப்படுகிறது.
Air Pollution

    முக்கியமான ஆதாரங்கள்
  • கால்நடை - 50 சதவிகித வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது
  • உரமிடுதல்
  • கடல்கள்
  • தாவரங்கள்
  • அங்கக உயிரிப் பொருட்களின் எரிப்பு
    கார்பன் மோனாக்ஸைடு (CO)
  • கார்பன் சம்பந்தப்பட்ட எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்- டை - ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாகிறது
  • ஆனால் அனைத்து முழுமையாக எரிக்கப்படுதில்லை. அந்த தருணத்தில் கார்பன் மோனாக்ஸைடு (CO) உற்பத்தியாகிறது
  • மனிதர்களின் பயன்பாடான மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கார்பன் மோனாக்ஸைடு வெளியேற்றத்திற்கு ஆதாரமாகும்.
     
    ஆவியாகும் கரிமச் சேர்வை (VOCs)
 
ஆவியாகும் கரிமச் சேர்வை என்பது கரிமச்சேர்வை ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடியதாகும். மேலும் இவை சுத்தமான ஹைட்ரோகார்பனிலிருந்து வரும் கரிம காற்று வளி மாசுக்களையும் உள்ளடக்கியது. இவை பகுதியாக ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரைன், சல்பர் அல்லது நைட்ரஜன் போன்றவற்றை உள்ளடக்கிய கரிமச் சேர்வையாகும்.
முக்கிய ஆதாரங்கள்:
  • ஓவியம் (ஆவியாகும் திரவம்)
  • எண்ணெய் உற்பத்தி (வாயு தீச்சுடர் மற்றும் வெளியேற்றம்)
  • எண்ணெய் துரிதம் (தீச்சுடம் மற்றும் நிலையற்ற வெளியேற்றம்)
  • எண்ணெய் அல்லது துரிதப்படுத்தப்படும் பொருட்களின் விநியோகம் (சேமிப்பிப்பிலிருந்து ஆவியாக்கம், வெளியேற்றப்படும் கொள்கலினால் இடப்பெயர்ச்சியில் ஏற்படும் இழப்பு)
  • உலர்ந்த சுத்தம் (துணிகள் ஈரமில்லா தன்மை)
  • மது உற்பத்தி (வடிப்பாலை மற்றும் எரிச்சாராயம்)
  • சாகுபடி பண்ணை (பயிர் வளர்ச்சி, பதப்படுத்திய பசும்புல் உற்பத்தி கழிவுநீர் படர்வு)

ஆவியாகும் கரிமச் சேர்வைக்கு (VOC) இயற்கை ஆதாரங்கள்
 
       VOC யின் வெளியேற்றத்திற்கு வனவியல் ஒரு முதன்மை இயற்கை ஆதாரமாகும். வெப்ப மண்டல காடுகளானது பொதுவாக பாதிக்கும் மேற்பட்ட மீத்தேனிலிருந்து VOC வெளியேற்றப்படுகிறது. தாவர தொகுப்பில் அதிக கரிம மூலக்கூறு இருக்கும். இவை வளிமண்டலத்தில் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுகிறது.

     ஓசோன் (O3)
 
  ஓசோன் என்பது;
  • படை மண்டலம் (stratosphere), இது இயற்கையாக அமைந்த வளிமண்டலத்தின் மேல் படலமாகும்.
  • அடிவளிமண்டலம் (troposphere), இயற்கையாக மற்றும் மனித இனத்தின் வெளியீட்டால் வளிமண்டலத்தில் ஏற்படும் கீழ் படலமாகும்.
  • படை மண்டலம் (stratosphere), சூரியனிடமிருந்து புவிக்கு வரும் அதிகப்படியான புறஊதாக்கதிர்களை தடுத்து இயற்கைக்கு நன்மைதரும் வகையிலுள்ளது
  • ட்ரோபோஸ்பியர் (அ) அடிவளிமண்டல், மனிதர்களிடமிருந்து வரும் முதன்மை மாசுக்களால் உருவாக்கப்பட்டதாகும். இதனடிப்படையில் இது ஒரு காற்று வளி மாசாகும்
  • இந்த அடிவளிமண்டலத்தின் முதன்மை மாசுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களிடம் வினைபுரிந்து இரண்டாம் நிலை மாசுக்கள் உருவாகிறது.
  • ட்ரோபோஸ்பியர் படலம், ஒளிவேதியியல் மூடுபனியின் முக்கிய பகுதியாகும்
    நிலையான கரிம வாயுக்கள் (POPs)
  • நிலையான கரிம வாயுக்கள் சூழ்நிலைமண்டலத்தில் சிதைவடையாமல் நிலையாக இருக்கும் வாயுக்களாகும். இவை மண் தரத்தினை பாதியாக குறைக்கிறது
  • இதன் பகுதியுடன் டை ஆக்ஸின், ஃப்யூரான், பாலிகுளோரினேட் பைஃபினைல்ஸ் (PCB3) மற்றும் ஆர்கனோகுளோரின் பூச்சிகள் (DDT) போன்றவையும் அடங்கும்.
  • இவைகள் உணவு சங்கிலியின் வழியாக மனிதன் மற்றும் விலங்குகளின் திசுக்களில் நுழைகிறது. மேலும் இவை காற்றுத் துகளுடன் நீண்ட போக்குவரத்து தன்மையை உடையது

   நிலையான கரிம மாசுக்களின் ஆதாரங்கள்
 
        சில POPs க்கள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. மற்ற POPs க்கள் தொழிற்சாலை இயக்கங்களான உற்பத்தியில் கரைப்பான், பாலிவினைல் குளோரைடாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

    காற்று மாசுபாடு மேலாண்மை
        ஒருபார்வை
 
      தொழில்நுட்பம், சரியான நேர்த்தி முறையில் முன்னேற்றம் மற்றும் தொழிற்சாலை பகுதியில் மாசு கட்டுப்பாடு, மாசுபாட்டின் அளவினை தடுப்பது மற்றும் தேவையற்ற பொருட்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவது போன்றவையாகும். இவை மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலின் அடிப்படையில் தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக அமையும். வகைபாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
மாற்று தொழில்நுட்பம்
  • நேர்த்தின் தற்போதைய முறையில் வெவ்வேறு சாத்தியமான செயற்கூறுகளை அளித்தல் மற்றும் மாசு கட்டுப்பாடு
  • தற்போது இருக்கும் மாற்று நுட்பங்கள்
- மண் ஆவியை பிரித்தெடுத்தல்
- உயிரி வெளியேற்றம்
- உயிரி அடுக்குகள்
- விளை நில பண்ணை
- குறைந்த தட்பவெப்ப நிலையில் வெப்பமடைந்து  ஆவியாகுதல்
- காற்று வளி தெளிப்பான்
- உயிரியல் தெளிப்பான்
- இயற்கை தளர்ச்சி
- தரைநீரில் உயிர்வழி நிவர்த்தி
- இருமுனை கட்டம் பிரித்தெடுப்பு
- கடல் நீரில் உப்பு பிரித்தெடுப்பு முறை

  • சில அறிவியலறிஞர்கள் அணு சக்தியை உருவாக்கத்தின் அடுத்த நிலையை அடைவதற்கு அணுக்களை பிளவுப்படுத்துகின்றன.
   தூய்மையான தொழில்நுட்பங்கள்
  • புதுப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் பல தடவை உதவுகிறது. குறைந்தபட்ச விலை இதனுள் அடங்கும். ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களின் அதிக பயன்பாட்டை தடுத்தல்
  • தற்போது நிலவரத்திலுள்ள தூய்மையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு
- நீர் ஆற்றல்
- சூரிய சக்தி
- காற்றுச் சக்தி
- புவி வெப்ப சக்தி
- அங்கக உயிரிப்பொருட்கள் ஆற்றல்
- பண்படுத்துதல்
- தாவர வளர்ப்பு
- மட்குக் குப்பை

புதுமையான / ஆக்கத்திறமையான தொழில்நுட்பங்கள்
  • புதுமையான தொழில்நுட்பத்தினால், மாசுக்களை கட்டுப்படுத்தும் திறமானது முன்னேற்றமடைதல்
  • தற்போதுள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:
- நீர்மம் வாயுக்களை உறிஞ்சும் கருவி
- காற்று தூய்மைபடுத்துதல்
- ஆக்ஸ்ஜனேற்றமடைதல்
- நல்ல காற்றோட்டம்
- மறுவளர்த்தி
- திண்மமாக்குதல்
- மண்ணை தூய்மையாக்குதல்
- உயிரியல் பொருள்
- சிதறச் செய்யும் பொருள்
- ஆற்றல் துகள்கள்
- குளிர்விக்கும் கோபுரங்கள்
காற்று மாசு கட்டுப்பாடு
காற்றுத் திறன்
  • காற்றிலுள்ள இயக்க ஆற்றலை விட காற்றுத்திறனின் மின்சாரத்தின் தன்மை குறைவாகும்
  • இயக்க ஆற்றலின் தன்மை, வேகம் 3 உடன் நேரடியான சமவிகிதமாகும்
            காற்று ஆற்றல் உற்பத்தி
  
Air Pollution

       நீர் எரிபொருள் பகுதி
  • நீர் என்பது ஆற்றலின் ஆதாரமாகும். நீரானது 12~ மின் கலத்தின் அதிக இயக்க ஆற்றல், அதிகப்படியான மின்காந்த கதிர் வீச்சின்போது ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கிறது
  • வாயு வெளியேற்றம் என்பது காற்றும் மற்றும் நீராவியின் கலவையால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுவாகும்.
  • எரிபொருள் அட்டைகள், வண்டிகள், பேருந்துகள், விமானம், கப்பல்கள், மற்றும் ஆற்றல் நிலையம் போன்றவற்றின் பயன்பாடு. இதுமட்டுமல்லாமல் நிலக்கரி எண்ணெய் (அ) வாயுக்களின் ஆற்றலில் பயன்படுத்தும் கருவிகளும் அடங்கும்
இயற்கை வாயு எரிபொருள் பயன்படுத்தும் பள்ளிபேருந்து
Air Pollution
வினையூக்கி மின்மாற்றி
  • தானியங்கு ஊர்தியில் பொருத்துதல் மற்றும் தொழிற்துறைகளில் பல்வேறு வகையான வடிப்பான்கள் மற்றும் உறைப்பான்களை பொருத்துதல்
  • சிறுமணியாலான உலோகத்திற்குள் ஆவியாகும் வாயுக்கள் வினைபுரிந்து தீங்குவிளைவிக்கும் வாயுக்களை தீங்கற்றதாக மாற்றப்படுகிறது.
      போக்குவரத்தின் மாற்று
  • வாகன ஒருங்கிணைப்பு
மலேசியா அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மற்றும் ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கார்பன் - டை - ஆக்ஸைடு (CO2), கார்பன் மோனாக்ஸைடு (CO), நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (NO2), சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2), போன்றவற்றிக்காக தனிப்பட்ட நபர்களுக்கு இடையே போக்குவரத்து பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.
  • மக்கள் போக்குவரத்து
பாதாள இரயில் அல்லது ஒருமித்த இரயிலை பயன்படுத்தும்போது சுற்றுப்புறச்சூழலுடன் விரோதமற்றும் பசுமை கூடக வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற போக்குவரத்தினை அதிகப்படுத்துதல் 
Air Pollution
மிதிவண்டி ஒரு மாற்று வழி


      இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு
  • சிறப்பான ஆற்றல்மிக்க பயன்பாட்டிற்கு தவறாமல் சோதனை செய்வது மற்றும் உதிரி பாகங்களை மாற்றுவது
  • போக்குவரத்திற்கு இயந்திரத்தில் தரம் மிக முக்கியமானதாகும் தீங்குவிளைவிக்க கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது
எளிமையான முறையில் காற்று மாசுக்கட்டுப்பாடு
அ. தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல்
ஆ. வளிமண்டலத்தில் வாயுக்கள் வருதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், புயல் காற்று சேகரிப்பில், தற்போது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மாசுக்களை மாற்றுகிறது
இ. நிலக்கரியானது நிலைமாற்றம் அல்லது தெரிவிலிருந்து வாயு எரிபொருளாக மாற்றம்
ஈ. கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு (ஒரு வகை கொடி, கேரட்) நைட்ரஜன் ஆக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு மற்றும் பிற வாயுக்கள்.

ஆதாரம்:
www.studentguide.in/biology/pollution.environment/control-of-air-pollution.htm 


நன்றி;- வேளாண்மை பல்கலைக் கழகம் வேளாண்மை இணையதளம்.கோவை

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மனிதன் --அனைத்துண்ணி

         இயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். 
       இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். 
      இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். 
     அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. 
       ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடியாகப் பெறுகிறான். 
           
    எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும். அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது 
          புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கனமற்றதுமாகும்.
 

              புலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

பிக் பேங் சோதனை : புரோட்டான் கதிர்கள் சாதனை வேகத்தில் மோதல்

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில், உலகளவில் இதுவரை இல்லாத வகையில் புரோட்டான் கதிர்களை அதிவேகமாக விஞ்ஞானிகள் மோதச் செய்துள்ளனர்.


இதுவரை அதிவேகம் எனக் கருதப்பட்ட வேகத்தை விட இன்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 3 மடங்கு வேகமாக புரோட்டான் கதிர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி‌‌க்-பே‌ங் ஆ‌ய்வு: சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் (ஒரு பில்லியன்=100 கோடி) ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌மோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க்-பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி அதில் உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய போது உருவான அணு மோதலை செயற்கையாக உருவா‌க்‌கி, அத‌ன் மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 80க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த பல ஆயிரம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் பல ஆண்டுகளாக முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது 10 பில்லியன் டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக ‌பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பி‌ங்-பே‌ங் சோதனை‌யை கடந்த 2008 செப்டம்பரில் துவக்கினர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன் கதிர்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க விஞ்ஞானிகள் ‌திட்டமிட்டனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தில் இன்று 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அளவில் புரோட்டான் கதிர்களை மோதச் செய்தனர்.

முன்னதாக புரோட்டான் கதிர்களை மோதச் செய்யும் பணியில் கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் சில மணி நேரம் தவித்தனர். எனினும், கோளாறுகளை சீரமைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோதச் செய்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008இல் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்திலேயே புரோட்டான் கதிர்கள் மோதல் நடைபெற்றது

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg

ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

MATTER & DARK MATTER ஒரு கண்ணோட்டம்.

MATTER & DARK MATTER ஒரு கண்ணோட்டம்.

வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.

அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யவே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.

இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும்
எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

அண்டம் -UNIVERSE

              அண்டம் -UNIVERSE


     நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது 


  கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட 


 சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy  


       (பால்வெளி மண்டலம்).




         
பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் 


கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து 

விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான 

விஷயம்.


     


ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் 


  சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் 


    உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் 


   ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் 


  ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே 
பிளாக் ஹோல்களும்.இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல,  


சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.


      ஒளி-ஒலி உள்பட.பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் 


சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் 


ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

மிகப்பெரிய அணு சோதனை உலகம்

பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள் !








     ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையம் இது. பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில் 300 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
        நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள் (இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ.
      கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முக்கியப்பணி.
       இதன் மூலம் ஏராளமான அணுக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பெரிய உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்று ஆராய்வதே இதன் நோக்கம். 


அதாவது பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது.
      அணுக்களை மோதச்செய்யும் இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


     இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து ரிஸ்க்கான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்என்று எஸ்.எம்.எஸ். இ-மெயில் மூலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர்.

கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் பரிசுகள்

கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் பரிசுகள்


      அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார்! ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார்.


     அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின!







          ஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த 'என்ரிகோ ஃபெர்மிப் பரிசு' [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது.


     மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த 'ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்', அமெரிக்க ரசாயனக் குழுவினரின் 'நிகோலஸ் பதக்கம்',


     1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறைகளின் 'பெர்கின் பதக்கம்' 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த 'ஃபிராங்கலின் பதக்கம்' ஆகியவற்றையும் பெற்றார்!


1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில்ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் 'ஸீபோர்கியம்' [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது !






Seaborg & McMillan

  சிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார்.


         டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப்பானது!


        அணு உலைகளிலும், சுழல்வீச்சு இயந்திரங்களிலும், இரவு பகலாய் யுரேனியத்தை நியூட்ரான்களால் தாக்கித் தேவையான புளுடோனியம் 'ஃபாட் மான்' அணுகுண்டு தயாரானது!





                                     Nobel Prize Winners

                                  Seaborg & McMillan




       நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தருவாயில், உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார்!

         1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானியருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று கருதினார்! 

       அக்கருத்தை வலுயுறுத்த 'ஃபிராங்க் விண்ணப்பம்' என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்கு [Secretary of War, Stimon] அனுப்பினார்!

விண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: 'முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம்!
   
  மனித இனத்தின் மீது கருணை எதுவு மின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும்! 

அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும்! அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும்! மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, 

அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்' 






                         Nagasaki Bombing




       யுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை! அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது!

      ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்!

உலக ஹிரோஷிமா தினம்



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -ஈரோடு மாவட்டம்.

அன்பு நண்பர்களே, 
taminaduscienceforumthalavadi.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை  வரவேற்கிறேன்.
                  66-ஆம் ஆண்டு உலக ஹிரோஷிமா தினம்
         
             
                                                   
                                              Liitle Boy (code name) மற்றும்  
                                              Fat Man(codename)               



        இரண்டாம் உலகப் போரின்போது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 06-ந்தேதி அன்று   அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தாக்குதலால் ஜப்பான் நாட்டின் "ஹிரோஷிமா" மற்றும் "நாகசாகி" நகரங்கள் மிகக்கடுமையான உயிர்ச்சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் ஆளாகிய  ( இன்றும் அந்நகர மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர்) 
  
    
         உலகையே நடுங்கச்செய்த இதன் 
நினைவுநாள்ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் ஆறாம் ஆம் தேதி  "உலக ஹிரோஷிமா தினம்''  கடைப்பிடிக்கப்படுகிறது.  அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கஉணர்த்தும் நாளாகவும், இத்தினம்
  அனுசரிக்கப்படுகிறது.
 

       அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில அளவிலான கட்டுரை,கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தியது.-TNSF-ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 
        'அணுசக்திகள் ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்'  
        என்ற கருத்தினை மையப்படுத்தி 20-08-2011க்குள் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் சேரும் வகையில் 
        மாநில அளவிலான ஓவியம்,கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.அதாவது
         
       (1) பள்ளி மாணவ,மாணவியர் ஆறாம்,ஏழாம்,எட்டாம் வகுப்பு பயில்பவருக்கு ''போரின் பிடியில் பிஞ்சுகள்'' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும்,
          (2)ஒன்பது முதல் +2 வரையிலான மாணவ,மாணவியருக்கு 'இது போல் துயரம் இனிமேல் வேண்டாம்' என்ற தலைப்பில் கட்டுரையும்,
        (3) கல்லூரி மாணவ,மாணவியருக்கு ''அன்னை பூமியில் அமைதி தவழட்டும்'' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் 
        (4) ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு ''அணு ஆயுதப் போட்டியும், மானுடத்தின் தலைக்குனிவும்'' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட்டன.
    
       போட்டிகளின்  ''ஈரோடு மாவட்ட முடிவுகள்'' ஆசிரியர் தினமான 05-09-2011 இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திரு ; N.நடராஜன் -ஈரோடு அவர்களால் அறிவிக்கப்பட்டது. 
    
    ;-ஈரோடு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்;-
  
           (1) ஓவியப்போட்டி-ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கானது.
          தலைப்பு= போரின் பிடியில் பிஞ்சுகள்.

   முதல் இடம் =     K.R.ராகுல்ராஜா,-(Bharathi Vidya Bhavan Matric School-Erode )

   இரண்டாம் இடம்=அபினேஷ், 6 th "E"-(U.R.C.Palaniyammal Matric school - Erode)

    மூன்றாம்இடம் =U.ராகிணி , 6th "E" - (Bharathi Vidya Bhavan Matric School -Erode )


      (2) ஆசிரியர்கள்  மற்றும் அலுவலர்களுக்கான கட்டுரைப்போட்டி
   தலைப்பு;- அணு ஆயுதப்போட்டியும்,மானுடத்தின் தலைக்குனிவும் 

      முதல் இடம்=   மரியாதைக்குரிய; R. ராதா அவர்கள்-
                                (U.R.C.Palaniyammal Matric school-Erode)

     இரண்டாம்இடம் = திரு; C.பரமேஸ்வரன்,
              (  TamilNadu State Transport Corporation-Thalavadi Branch-Erode division )

        மூன்றாம் இடம் = திரு;S.T.ஐயப்பன், அவர்கள்,
                      (Sathyamangalam )

     
     (3) ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான                                           மாணவர்களுக்கானகட்டுரைப் போட்டி
    தலைப்பு ;-இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம்.
  
      முதல்இடம்= C.உதயக்குமார், +1 - B (Biology)
           U.R.C.Palaniyammal Matric School_Erode)
    
     இரண்டாம் இடம்=G.பிருந்தா, 9-th Std "F"
         U.R.C.Palaniyammal Matric School - Erode )
   
     மூன்றாம் இடம்=G.கண்ணன்,
   
       (4) கல்லூரி மாணவர்களுக்கான  கவிதைப் போட்டி.
      தலைப்பு ;- அன்னை பூமியில் அமைதி தவழட்டும்.
  
          முதல்இடம்= நேசவேணி,
             ( Kongu Engineering College -Erode )
  
      இரண்டாம்இடம் = K.அருள் பிரசன்னா,
         ( Kongu Engineering College - Erode )
  
        மூன்றாம் இடம் = V.ஜெயப்பிரியா,
          (Vellalar College - Erode )
   

          ஜாதி,மத,மொழி, இன, வேறுபாடின்றி அனைவரும் மனித சமூகம் என மனித நேயம் போற்ற வேண்டும்.
    சமூக முன்னேற்றத்திற்காகவும்,நாட்டின் நலனுக்காகவும், அனைவரின் சிந்தனை இருக்க வேண்டும் .
     சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க வகை செய்யவேண்டும்,
      இந்த இயற்கையினை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதனையும் அனைவரும் உணர வேண்டும்,உணரச்செய்ய வேண்டும்.



     முதல் அணுகுண்டு சில தகவல்கள்.
      ஹிரோஷிமா, நாகாசாஹி நகரங்களின் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு வெடிப்பு உலகப்பிரசித்தம். இன்னமும் கூட அணுகுண்டு வெடித்த இடத்தில் பாதிப்பின் சுவடுகள் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் இந்த அணுகுண்டு வெடிப்புக்கு பின் மிகப்பெரிய ராஜதந்திரம் இருந்தது. அதை நடத்தியவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹேரி எஸ்.ட்ரூமன்.ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஹேரி எஸ்.ட்ரூமன் உதவி ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி வகிப்பவர் இறக்க நேரிட்டால் உதவி ஜனாதிபதிஉடனே நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ரூஸ்வெல்ட் மாரடைப்பால் இறந்த பின் உதவி ஜனாதிபதி ட்ரூமன் அமெரிக்காவின் 33 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள் உலகப்போரில் உலகநாடுகளை ஆட்டிப்படைத்து வந்த ஜெர்மனி நாடு தோல்வி கண்டு நேச நாடுகளில் சரண் அடைந்தது. ஐரோப்பாவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் தொடர்ந்து போராடி வந்தது. சீனாவை தனது ஆதிக்கத்திலேயே வைத்திருந்தது. பசிபிக் கடலில் இருந்த தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் சந்திக்காத இக்கட்டான மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு ட்ரூமன் முடிவு காண வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர ஜப்பானை உடனடியாக சரணடைய செய்ய வேண்டும். அதற்கு ஜப்பான் நாட்டின் மீது அணு குண்டுகளை பயன்படுத்துவதை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் ட்ரூமன் ஒருவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.அணுகுண்டை பயன்படுத்தாவிட்டால் ஜப்பான் நாட்டை தோற்கடிக்க மேலும் பல மாதம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். அமெரிக்காவில் லட்சக்கணக்கான போர் வீரர்களை ஜப்பான் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த வேண்டியிருக்கும். ஜப்பான் நாட்டின் மீது தொடுக்கப்படும் போரில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கா, இங்கிலாந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் போர் வீரர்கள் உயிரிழக்க நேரிடும். மேலும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். தன் நாட்டிற்கும், தன் கூட்டணி நாடுகளுக்கும்ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் தடுத்து நிறுத்த ட்ரூமன் அணுகுண்டுகளை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தார். அங்கீகாரம் கொடுத்த சில மணி நேரத்தில் லிட்டில்பாய்’(LITTLE BOY) என்ற முதல் அணுகுண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து பேட்மேன்’(FAT MAN) என்ற இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது, அவ்வளவுதான் ஜப்பான் ஆடிப்போய் விட்டது. உடனே போர் நிறுத்தம் செய்தது. அமெரிக்காவிடம் சரண் அடைந்தது.
இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது 
  
   


    

        மரியாதைக்குரிய ஐயா;சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா







            Glenn Seaborg       
                    (1912-1999)

        LITTLE BOY(codename) மற்றும் FATMAN(code name) இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை

  முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 ! இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 !
புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க்! 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்! அதற்குப் 'புளுடோனியம்' என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்!





               Plutonium Bomb

       
ஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார்! அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது! சிக்கனச் செலவில் ஆக்க வல்லது! சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது! அரிய அணுசக்தி மூலகம் 'புளுடோனியம்' கண்டு பிடித்ததற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்!





                         Glenn Seaborg