வாழு,வாழவிடு.

வியாழன், 13 அக்டோபர், 2011

ஒரு நாளின் காலம் 4மணி

                நமது நாளின் நீளம் -பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 24மணிநேரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த காலம் மாறிவரும் சூழல் உடையது.அதாவது நம் நாளின் நீளம்1,20,000ஆண்டுகளுக்கு ஒரு விநாடி காலம் கூடுகிறது.அதாவது பூமியின் சுழல்வேகம் படிப்படியாகக் குறைகின்றது.இதற்குக்காரணம் சந்திரன் நம் கடல்களில் எழுப்பும் அலைகளே என்பதை சர் சார்சு டார்வின்(Sir George Darwin) விளக்கினார்.திங்கள் தனக்கு நேராக உள்ள பூமியின் முற்பகுதியை வன்மையாகவும்,நேர் மறுபுறம் உள்ள (பூமியின்) பிற்பகுதியை  மென்மையாகவும் கவர்ந்து இழுக்கிறது. திங்களின் இழுப்பாற்றலில் உள்ள இத்தகைய வேறுபாட்டின் காரணமாகப் பூமியில் முன்னும்பின்னுமாக உள்ளகடல்களில் இரண்டு பேரலைகள் எழும்புகின்றன.பூமி,சந்திரன் நகர்வதை விட விரைவாக- மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் இந்த அலைகள் சந்திரனை நோக்கியபடியே கிழக்கிலிருந்து மேற்காக நகருகிறது.இவ்வாறு பூமி சுழலும் திசைக்கு எதிர்த்திசையில் அலைகள் நகர்வதால் பூமியின் சுழல் வேகத்திற்கு தடையாக அமைந்து சுழற்சியைக் குறைத்து வருகின்றன.பூமியின்  சுழலும் வேகம் குறைவதால் நமது நாட்காலம் வரவர நீண்டுகொண்டே செல்கிறது.

        இன்று நம் நாளின் காலஅளவு 24மணி.சந்திரன் இருக்கும் தொலைவு 238840 மைல்.நம் மாதத்தின் காலஅளவு அதாவது சந்திரன் பூமியைச் சுற்றிவரும் காலம்27.4நாட்கள்.திங்கள் தோன்றிய ஏறத்தாழ 2000,000,000,000ஆண்டுகளுக்கு முன்னர் திங்கள் விலகிச் செல்கிறது என்கின்ற அடிப்படையில் காலத்தை எதிர்த்து பின்னோக்கி சென்று பார்த்தால் நம் நாளின் காலஅளவு 4மணி அளவுதான் இருக்கவேண்டும் என்று அறிகிறோம்.அப்பொழுது திங்கள் ஏறத்தாழ 9000மைல் தொலைவில் இருந்தபடி 4-மணிக்காலத்தில் நம் பூமியை விரைந்து சுற்றி இருக்க வேண்டும்.அதாவது நம் நாளின் காலஅளவும்,மாதத்தின் கால அளவும் ஒரே அளவாக அதாவது 4-மணி என்று இருந்தன.மேலும் அக்காலத்தில் சந்திரன் பூமிக்கு அருகில் இருந்ததால் அதன் ஈர்ப்பு விசையால் கடலில் மிகப்பெரிய அலைகளை எழுப்பி அவற்றின் ஆற்றலால்,இன்று விலகி ஓடுவதைவிட விரைந்து ஓடிஇருக்கவேண்டும்.
  திங்கள் நான்கு அடித்தொலைவு விலக நூறுஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
   இப்படியாக திங்கள் தன்பாதைவட்டத்தை விரிவாக்கிக்கொண்டு செல்வதற்கும் முற்றுப்புள்ளிவைக்க  ஒரு காலத்தில் ஒரு எல்லைவந்து சேரும். திங்கள் பூமியிலிருந்து 3,40,000 மைல் தொலைவிற்கு விலகிநிற்கும். அப்போது நமது நாட்காலமும்,மாதமும் ஒரே அளவினதாக அதாவது 47 நாட்களாக இருக்கும்.அப்போது இன்றுபோல் 24மணிநேரத்தில் இரவும் பகலும் மாறிமாறி வருவது போய் மிக நீண்டகாலம் கொதிக்கும் பகலாகவும்,மிகநீண்டகாலம் குளிர்ந்து நடுங்கச்செய்யும் இரவாகவும் பூமியில் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்.இந்த நிலை-திங்களும் பூமியும் ஒரேவேகத்தில் சுழலும்நிலை வந்துவிட்டால் பூமியில் திங்கள் எழுப்பும் கடல் அலைகள் கடற்பரப்பில் நகரவேண்டிய தொல்லை இல்லாமல் போகும்.அப்போது அவை சுழலும் பூமியை தடுத்து நிறுத்தும் தடையாகவும் செயல்படாமல் போகும்.எனவே,திங்கள் பூமியை விட்டுவிலகிச் செல்லாமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக