வாழு,வாழவிடு.

புதன், 28 செப்டம்பர், 2011

மாறிவரும் கல்வி முறைகள்

                மாறிவரும் கல்வி முறைகள்

               மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் நமது (ஈரோடு) மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்  திரு.பொன்.குமார். அவர்கள். 

      தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது.


காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.

      தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

      கற்பதில் புதிய அணுகுமுறைகள்

       வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரியர்களிடையே கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. வகுப்பறைகளில் அந்த மாற்றத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

           பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் உரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.

பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.

மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. ''குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்'' என்பதே இதன் பொருள்.

          முதலாம் மற்றும்  இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம் மற்றும்  நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.

மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முறைகளும் மாறியுள்ளன.

வகுப்பறையில் நான்கரை அடி உயரத்திற்குத் தாழ்மட்டக் கரும் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் மாணவர்கள் சாக்கட்டிகளைக்கொண்டு எழுதிப் பழகுகின்றனர். தாள்களில் எழுதிப் பழகியவர்கள் கரும்பலகையில் எழுதும்போது கையெழுத்து சரியாக வராது. இப்பயிற்சி அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்விமுறையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓவியப் பயிற்சி குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் தமக்குப் பிடித்த படங்களை வெள்ளைத்தாள்களில் வரைகின்றனர். அது ஒரு கிளியாக இருக்கலாம். கரடியாகவோ, நாயாகவோ, நரியாகவோ, நிலவாகவோ, இயற்கைக் காட்சியாகவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றாகவோ இருக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு வரைந்த படங்கள் வகுப்பறையின் குறுக்கே கம்பிகளால் அமைக்கப்பட்ட பந்தல்களில் தொங்கவிடப்படுகின்றன. மாணவர்கள் வரையும் படங்களை ஆசிரியர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்கின்றனர். செயல்வழிக் கல்விமுறை என்பது ஒருவகையில் விளையாட்டின் கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. விளையாட்டுகளின் மீது இயல்பான ஆர்வம்கொண்ட குழந்தைகளுக்குக் கற்றல் ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.

     கணிதம் பயிற்றுவிக்கும் முறைகள்

      தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் ''கணிதம்'' கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.

         புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தின் கீழ் கதைகள், பாடல்கள், அறிவியல் வினா விடைகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள் முதலான அரிய உள்ளடக்கங்களைக்கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. தனியார் பள்ளிகளில் இந்தப் புத்தகப் பூங் கொத்துத் திட்டம் இல்லை.

இவற்றின் சில தலைப்புகள் யுரேகா- யுரேகா, கோட்டை, ஆவணக் காப்பகம், சித்தன்ன வாசல், இந்திய அறிவியல் அறிஞர்கள், இளம் பருவத்தில் விஞ்ஞானிகள், காலநிலை, கடல்கள், செவ்வாய் கிரகம் முதலானவை. இப்புத்தகங்களின் வண்ணமும் தாளின் தரமும் தற்போது வெளி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்கவை. மாலை நேரக் கற்றல் செயல்பாடுகள் என்பவை மாணவர்களுக்கிடையே நடைபெறும் குழு விளையாட்டுகள்தாம். ஆசிரியர் மேற்பார்வையில் அல்லது அவரும் இணைந்து பிற்பகலில் விளையாட்டுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் உற்சாகம், ஆளுமைப் பண்பு, மகிழ்ச்சி, கூட்டுமுயற்சி, தோல்வியை ஏற்கும் பண்பு ஆகியவை இதன் மூலம் பேணப்படுகின்றன.

        அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புகள்வரை பயிலும் குழந்தைகளுக்குப் பாட வாரியாகப் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாட அட்டைப் பயிற்சியை முடித்தவுடன் அந்தப் பயிற்சி ஏட்டை எழுதி முடிக்கின்றனர். அவர்களின் அடைவுத்திறன் மாணவர் வாரியாக அட்டையில் குறிக்கப்படுகிறது. மாதவாரியாகவும் அட்டையில் அடைவுத்திறன் குறிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்திச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

          ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி,  ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையில்  (Simplified Active Learning Method) என்று அறிமுகப்படுத்தப்பட்டு அது  ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.

         இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.

              கணினிக் கல்வி

            மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் ,மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. 

      தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.

       வழக்கமாகத் தரப்படும் கையெழுத்துப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி, அறிவியல் செய்முறைப் பயிற்சி முதலானவை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. ஆபரண நகை செய்தல், காளான் வளர்ப்பு, வண்ண ஓவியங்கள் தீட்டுதல், பூக்கூடை, மேட், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

           தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (SC, ST) குழந்தைகளுக்குச் சிறப்பு ஆளுமைத்திறன் பயிற்சி தரப்படுவதுடன் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் புத்தகப் பை, கணித உபகணங்கள், அகராதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் உணவுடன் கூடிய உறைவிடப் பயிற்சியாகும். 

       பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் என்னும் முறை செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகப் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டப்பயிற்சி, தையல் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்கின்றனர். 

       இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய பகல் நேரப் பராமரிப்பு மையங்கள், பயிற்றுவிக்க சிறப்புக் கல்வித்தகுதிபெற்ற சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கு வராத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சென்று தசைப்பயிற்சி, புலன் பயிற்சி அளித்துக் கல்வியும் கற்பிக்க வசதி என இந்தத் திட்டம் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி விரியும் ஒன்று. 


        பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூலம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்குக் கல்வியுடன் தசைப்பயிற்சியும் அளிக்கின்றனர். இங்கே குழந்தைகளை விட்டுவிட்டுக் காத்திருக்கும் பெற்றோருக்கும் தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி (ஷிஸிஙிசி) மையங்கள் அமைக்கப்பட்டு உண்டு உறைவிடப் பயிற்சியாகச் சிறப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.

இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (ரிநிஙிக்ஷி) என்னும் சிறப்புப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் 6முதல்-8ம் வகுப்பு படிக்கும் வயது ஆன பெண் குழந்தைகளுக்கு எட்டாவது முடித்து முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ப்பதுவரை கல்வி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ஆம் வகுப்பில் சேர்வது உறுதிப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. 

        அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கற்கும் முறைகள் மாறியுள்ளதால் கற்பிக்கும் முறைகளும் மாறியுள்ளன. அறிவியல் மாற்றம்தான் வாழ்க்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 


       மேற்கூறிய கல்விச் செயல்பாடுகளை எல்லாம் தனியார் பள்ளிகள் இழந்துவிட்டன. தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்திற்காக வகுப்பறைச் சூழலையோ கல்விச் சூழலையோ மாற்றிக்கொள்ளாமல் மனப்பாட முறைகளைப் பின்பற்றி பழைய மரபு சார்ந்த முறையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

      தனியார் பள்ளிகளில் உயிரோட்டமுள்ள வகுப்பு (Smart Class) என்பது இல்லை. ஆனால் அது (Smart Class) அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ளது.

    கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள்

           கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியர், ஒரு பிரம்பு, ஒரு சாக்பீஸ், ஒரு  கரும்பலகை, ஒரு புத்தகம் என்பது பழைய நடைமுறை. இப்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பில்லை. வகுப்பு முழுக்க தாழ்மட்டக் கரும்பலகைகள். சாக்பீஸ் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கைகளில் வந்துவிட்டது. வண்ணமிகு பல்வேறு தலைப்புள்ள புத்தகங்கள், கற்பிக்கும் முறைகள் ஆசிரியர் சக மாணவராகக் குழந்தைகளுடன் அமர்ந்து கற்பிக்கிறார். பழைய குருகுலமுறையிலும் குருவுக்கு உட்கார மனைப்பலகை இருந்தது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் பாயில் அமர்ந்து கற்பிக்கின்றனர். நவீன யுக்திகள் ஆசிரியருக்குத் தெரிந்திருப்பதுடன். கணினி இயக்கப் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஜிக்ஷி, ஞிக்ஷிஞி, லிசிஞி இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வசதி ஜிக்ஷி, ஞிக்ஷிஞி உள்ளது. 

        மாணவர்கள் வரைந்த படங்களைத் தனி உற்சாகத்துடன் கம்பிப் பந்தலில் மாட்டி ஆசிரியர்கள் அழகுபடுத்துகிறார்கள். மாணவர்களின் குழு விவாதங்களில் பங்கேற்கின்றனர். கூடி விளையாட்டு என்கிற மாலைச் செயல்பாடுகளில் இவரும் மாணவர்களோடு விளையாடுகிறார்.

      ஆசிரியர்களின் கல்வித் திறன்கள் மேம்படப் பல்வேறு பயிற்சிகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவளப் பயிற்சி மையம் மூலம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சிகள், ஆபரண நகை செய்தல், மெழுகுவர்த்தி, சாம் பிராணி, சாக்பீஸ் செய்தல், கண்ணாடி ஒளிகள், முகமூடிகள், பர் பொம்மைகள் செய்யப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் ஆங்கிலம் போதிக்கும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

      அறிவியல் உபகரணங்கள் கையாளும் பயிற்சியும் மாணவர்கள் உடல் நலம் பேணும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கற்பித்தலை ஓர் இனிமையான செயலாக ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் எதுவும் தனியார் பள்ளிகள் மூலம் அளிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் மனவியல் பற்றிய சிந்தனையை இப்பயிற்சிகள் வளர்க்கிறது. 

            கல்வி மேதை ராதாகிருஷ்ணனின் ''கற்பதை நிறுத்திவிடுபவர்கள் ஆசிரியர்களாகத் தொடர முடியாது'' என்ற  வார்த்தைகளுக்கு இப்போது பயிற்சிகளின் மூலம் பலன் கிடைத்திருப்பதுடன் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆசிரியர்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. கிராமக் கல்விக் குழு மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு குழந்தைகளின் சிக்கல்களைக் களைய முற்படுகின்றனர். 

       பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்துவருகின்றனர்.

                எளிமையான கதைகள், சுவை மிக்க உரையாடல்கள், நல்லொழுக்க மிக்க செயல்பாடுகள், சுகாதாரத்தைப் போற்றும் நடைமுறைகள் ஆகியவை ஆசிரியர்களின் முதல் பணியாக மாறிவிட்டது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்க விரும்புவதுபோல் மக்கள் கூறும் நல்ல சொற்களை ஆசிரியர்களும் கேட்க விரும்பத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர்கள் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றனர். 

      கழிப்பிட வசதி, கட்டட வசதி போன்றவற்றை நேரடியாக உயர் அதிகாரிகளிடம் சென்று கேட்டுப் பெற்றுப் பள்ளியை மேலும் சிறப்பாக வைத்திருக்கும் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் கற்பித்தல் முறையின்மீதும் பயிற்சிகள்மீதும் ஆர்வத்தைக் காட்டுவதில் சுணக்கமாக இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.

          மலைப்பகுதி, தொலைதூரப் பகுதிகளுக்குத் தற்போது அவர்களே சொந்த வாகனத்தில் சென்றுவிடுகின்றனர். அந்தியூரில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் ஆசிரியர்களே தனி ஜீப்புகளில் பல குழுக்களாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியர் வராமை குறைந்துள்ளது. பள்ளிகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

         புதிய உத்திகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உருவாகிவருகின்றனர். அரசுப் பள்ளிகளின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. அரசுப் பள்ளி என்பது நல்ல கட்டடம், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான குடிநீர், கணினிமையம், தொலைக்காட்சிப் பெட்டிகள், புத்தகப் பூங்கொத்துடன் கூடிய நூலகம், பாதுகாப்பான சுற்றுச்சுவர், நவீன வசதிகளுடனான வகுப்பறை என மாறத் தொடங்கிவிட்டது.



           தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும், சமூக நலமிக்க அலுவலர்களும் ,நவீன ஆலோசனை தரும் வட்டார வள மையங்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.

       (நன்றி : திரு.பொன்.குமார் C.E.O.அவர்கள் [அனைவருக்கும் கல்வி இயக்கம்],  மற்றும் காலச்சுவடு பதிப்பகம்).

இந்திய ஆசிரியர் தினம்.&ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு

      SEP-05- இந்திய ஆசிரியர் தினம்.

ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?


நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .


இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.


ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம்.

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,


என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,


ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.



தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.


புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.


கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.


தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.


இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.


அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.


இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம். 

 ====================================================================

வெள்ளி, ௨௮ அக்டோபர், ௨௦௧௧

6-வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2011 /தமிழகத்திலிருந்து 27 ஆசிரியர்கள் தேர்வு


மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவற்றோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அளவில் நடத்தக்கூடிய,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வே தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு. கடந்த 2003 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் இம்மாநாடு அறிவிக்கப்படும். இந்த ஆண்டிற்கான பொதுத்தலைப்பாக அறிவியல் கல்வியின் போக்கும் புதிய சவால்களும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவியல் பாடம் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதுமைகள், அறிவியல் பாடங்களுக்கு இடையிலான உட்தொடர்பு,வேதியியலும் தரமான வாழ்க்கையும் ஆகியன துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில் அதிக அளவிலான ஆசிரியர்களைப் பங்கேற்க வைக்கும்பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (தென்மண்டலத்தில் தேனி,மதுரை ஆகிய இடங்களில்)பயிற்சி முகாம்களும், கலந்துரையாடல் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதன்விளைவாக தமிழகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் ஆசிரியர்களால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் நேபாளம்,வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும்கூட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்மாநாடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதையும் அறியலாம். இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ந்தேதி மாநாட்டிற்கு தேர்வான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக தேர்வான ஆய்வறிக்கைகள் விபரம்: அந்தமான்,நிக்கோபார், மேகாலயா, காஷ்மீர், மிசோரம் தலா-1, இமாச்சல்-2, அசாம்-3, குஜராத்-3, சதீஸ்கர்-4, கர்நாடகா, பஞ்சாப் தலா-5, கேரளா-6, ஜார்கண்ட்-7, ம.பி, சண்டிகர்-8, இராஜஸ்தான்-9, மேற்கு வங்காளம்-10, டெல்லி, கோவா-11, பிகார்-13, பாண்டிச்சேரி-14, உ.பி-16, உத்தரகாண்ட்-19, ஹரியானா-19, மஹாராஷ்டிரா-22, தமிழகம்-27, ஆந்திரா-52, ஒரிசா-67,நேபாளம்-1, வங்கதேசம்-1.
 
தமிழகத்திலிருந்து தேர்வான ஆசிரியர்கள் விபரம்:
S. No.TITLE OF PAPERSub-ThemeOral/Poster [O/P]STATEAUTHORS/ADDRESSES
XXIV.



1Biotechnology For Rust Free Iron Metal surfaceIIIOTamil NaduDr. S. Rajendran, Unit. Of Rural Biotechnology, Deptt. Of Botany, Saraswathi Narayanan College, Madurai, Tamilnadu, Pin- 625022
2Application of Remote Sensing Data in Land use and Land Cover StudiesIIOTamil NaduDr. V.Emayavaramban, Associate Professor, Deptt. Of Geography, School of Earth and Atmospheric Sciences, Madurai Kamaraj University, Madurai, Tamil Nadu- 625021
3Herbal Hair DryIIIPTamil NaduProf. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
4Real Education Must Embrace Our Daily LifeIIOTamil NaduP.Rajan, Abraham James Memorial Matric School, Gnaram Vilai, Pacode Post, Kanya Kumari Distt., Tamilnadu, Pin- 629168
6Effect of Yogasanas on Reducing Obesity in School ChildrenIIOTamil NaduV.Ganesan, Principal, Satchidananda Jothi Nikethan, Matric Higher Secondery School, Kallar, Mettupalayam, Coimbatore, TamilNadu, 641 305
9Utilising the Natural Resources to Remove Metal Ions in Waste WaterIPTamil NaduMr.S.Elamaran, Pappunaykkanpatti, Peraiyur Taluk, Madurai District, Tamil Nadu, Pin- 625 708
11Science Education ActivityIPTamil NaduMr. M. Pandiarajan, Teacher, 10C, RMC Colony 2nd Street, Muthupatti, Madurai, Tamilnadu, Pin-625003
12Household Chemical - Body Care ProductsIIIOTamil NaduProf. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
13Food Processing and PreservationIIIOTamil NaduMr. T. J. Nagendran, Murugappa Nagar, Third Cross Street, Tiruttani, Tiruvallur District, Tamil Nadu, Pin- 631 209
14Chemical Science and Quality of Life.IIIOTamil NaduK. Mahamudha, W/o, M.Abubacker Siddia, 6-2-48, Nagalapuram, (Near R.J. Office) Batlagundu, Dindugal (D.T.) Tamilnadu,
15Geography as an interdisciplinary and correlating scienceIIPTamil NaduG. Thirumoorthy, Asst. Prof., Vinaya Mission's College of Education, Kirumampakkam, Puducherry, Tamilnadu,Pin-607402
17Effluent - A Remedial MeasureIIIPTamil NaduJ.Sheela Grace, Sachidhanandha Jothi Nikethan, Kallar, Mettupalayam, Coimbatore, Tamil nadu- 641305
18Innovation techniques in teaching - learning of physicsIOTamil NaduSenthilkannan K, Astt. Prof.& Head Incharge, Dept. of Physics, School of Engineering, Vels University, Pallavaram, Chennai, State: Tamil Nadu
194 Steps of enhance learning outcomesIOTamil NaduRachna Lakshminarayanan, C-6, Green Gardens, Nabard Officers Quarters, No.-8 Cenotaph Road, Teynampet, Chennai, Tamil Nadu, 600018
20Effectiveness of software package to write tamil lesson plan for B.Ed. Students- TeachersIPTamil NaduDr. S. K. Panneer Selvam, Asst. Prof. Dept. of Education, Bharathidasan University, Trichy, Tamil Nadu.
21Challenges in imparting science education to the differently abledIOTamil NaduDr. P. Iyamperumal, Executive Director, Tamilnadu Science and Technology Center, Gandhimandapm Road, Chennai, Tamil Nadu,-600025
22Hygiene, Heath and Environment Science.IIIPTamil NaduS.Murugesan, Tamil Nadu Science Forum, E 9/24, TNHB, Bagalpur Hutco, Hosur, Krishnagiri Dt., Tamilnadu, Pin-635109
23Carbon Capture Using Genetically Engineered BacteriaIIIPTamil NaduDr. V. Sukumaran, Dept. of Biotechnology, Periyar Maniammai University, Thanjavur, Tamil Nadu, Pin-613403
24Green Chemistry in generating minimum waste and utlising minimum energyIIIOTamil NaduDr. T. Senthilnathan, Professor, Dept. of Phisics, Velammal Engineering College, Chennai, Tamil Nadu, Pin-600066
25Effectiveness of cooperative learning in biology for standard XI studentsIOTamil NaduDr. R. Annakodi, Associate Professor, Dept. of Education Avinashilingan Instt. For Home Sciuence and Higher Education, Varpalauam, Thadagam-P.O.. Coimbatore-108, TamilNadu
26Study of Science Experiments prescribed in Tamil Nadu State Science Text Book.IOTamil NaduM. Pandiarajan, Teacher, Champak Nurcery and Primary School, Muthuppatti, Madirai, Tamil Nadu, Pi-625003
27Monitoring and Measurement Opportunities of Food Contaminants Through Process ApproachIIIOTamil NaduProf. Dr. Vijayan Gurumurthy Iyer, Principal, Prince Dr. K. Vasudevan College of Engineering & Technology, 9 B, Block-II, Rathna Nagar Road, Virugambakkam, Chennai-92, Tamil Nadu
தேர்வான ஆசிரியர்களுக்கு நவம்பர்,8ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வான ஆய்வுக்கட்டுரைகள் தேசிய அளவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது. போக்குவரத்து, தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் பணிமேல் அனுமதியுடன் கல்ந்துகொள்ளலாம். தமிழகத்திலிருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

அறிவியல் வணக்கங்களுடன்...
தே.சுந்தர்,தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்,
ஆசிரியர் இணையம்&ஆசிரியர் அறிவியல் மாநாடு
நன்றி !
தேனீ மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
 

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அறிவியல்

  அன்பு நண்பர்களே, 
       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவிற்கு தங்களை வருக! வருக!! என வரவேற்கிறோம்.

      அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவின் அடிப்படையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. 

      ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. 
      இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்கு உணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.             துறைகள்
    இயற்கை அறிவியல்
         அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் ஆகியவற்றையே சிறப்பாக குறிக்கிறது. இவை இயற்கை அறிவியல் என்று இப்போது அறியப்படுகின்றன. 
      இயற்கை அறிவியலில் ''கணிதம்'' பன்முக வலுவோடு பயன்படுகிறது. இவை பற்றி துல்லியமாக புறவயமாக ஆராய முடிவதால் இவற்றை வலு அறிவியல் துறைகள் (hard sciences) என்கின்றனர்.
     Formal Sciences
கணிதம் கணினியியல் மொழியியல் முறைமையியல்
சமூக அறிவியல்
சமூகவியல், மானிடவியல், அரசறிவியல், பொருளியல் போன்ற துறைகள் சமூக அறிவியல் துறைகள் ஆகும். இத்துறைகளில் மனிதர் தொடர்புடையவை. அகம் தொடர்புடையவை. ஆகையால் அறிவியல் முறைமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, உறுதியான கோட்பாடுகளை உருவாக்குவது சிரமமானது.
செயல்முறை அறிவியல்அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் ,இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (Techniques) ஆகும். 
       அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். செயல்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அந்த ஆதாரங்கள் பகுத்தறிவு ஆய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

காவல்துறை-பணிக்கேற்ற குறியீடுகள்

         காவல்துறை-பணிக்கேற்ற குறியீடுகள்

அன்பு நண்பர்களே, 
       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவிற்கு வருக!வருக!!என வரவேற்கிறோம்.
    
     இந்தப்பதிவில்  தமிழ்நாடு காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு  அவர்கள்'' பணிக்கேற்ற குறியீடுகள்'' பற்றி தெரிந்து கொள்வோம்.       

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

 பதவி

பதவிச் சின்னம்

காவல்துறைத் தலைமை இயக்குனர்அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர்ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர்மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர்மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர்இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர்சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர்சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர்பட்டை எதுவுமில்லை.

சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்

'தமிழ் '99 தட்டச்சு முறை மிக எளிதானது.'




அன்பு நண்பர்களே, 
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவிற்கு தங்களை வருக!வருக!! என வரவேற்கிறோம்.

   தமிழ்'99 தட்டச்சு முறை மிக எளிதானது.கீழ் பதிவிட்டுள்ள விவரங்களை
பொறுமையாக, நிதானமாக, நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள்.தமிழ் தட்டச்சு செய்ய எவ்வளவு எளிதாக உள்ளன. என அனுபவ ரீதீயாக உணருங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ -இவை உயிர் எழுத்துக்கள் 12  இந்த உயிர் எழுத்துக்கள் தட்டச்சு செய்ய Key Board-இல் a,q,s,w,d,e,g,t,r,c,x,z,என தட்டச்சு செய்க.

, , , , , –(வல்லினம்) , , , , , –(  மெல்லினம்) , , , , , –(இடையினம்) இவை மெய்யெழுத்துக்கள் 18 ஆகும்.

     இந்த மெய்யெழுத்துக்கள் தட்டச்சு  செய்ய Key Board_இல் h, [ , o, l , j ,u என தட்டச்சு செய்தால் க,ச,ட,த,ப,ற வல்லின மெய்யெழுத்துக்களும், Key Board-இல் b, ], p, ; , k, i, என தட்டச்சு செய்தால் ங,ஞ,ண,ந,ம,ன மெல்லின மெய்யெழுத்துக்களும், Key Board-இல் ‘ , m, n, v, ?, y என தட்டச்சு செய்தால் ய,ர,ல,வ,ழ,ள  இடையின மெய்யெழுத்துக்களும் பதிவாகும்.இந்த முப்பது எழுத்துக்களுக்கும் ஒரு விசை அழுத்தம் மட்டும் போதுமானது.
   ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ,-இந்த ஆறு எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்கள்.இவைகளை தட்டச்சு செய்ய Key Board-இல் shift+q, shift+w, shift+e, shift+r, shift+t, shift+y என ஒவ்வொரு எழுத்துக்கும் ஷிப்ட் கீ அழுத்தி பிறகு எழுத்துக்கள் தட்டச்சு செய்ய இந்த வடமொழி எழுத்துக்கள் பதிவாகும்.
   வடமொழி எழுத்துக்களுக்கு மட்டும் ஷிப்ட் அழுத்தி எழுத்துக்கள் அழுத்த வேண்டும் அதனால் வடமொழி எழுத்தக்களுக்கு மட்டும் இருவிசை அழுத்தம் தேவை.முயற்சி செய்துதான் பாருங்களேன்!.

தமிழ்’99 முறையில் தட்டச்சு செய்ய (ஆங்கில எழுத்துக்களும் அதற்கு இணையான தமிழ் எழுத்துக்களும்)
உயிர் எழுத்துக்கள் பதிந்துள்ள ஆங்கில எழுத்துக்கள். கீழ்கண்டவாறு;-
a-அ,  q-ஆ,  s-இ,  w-ஈ,  d-உ,  e-ஊ,  g-எ,  t-ஏ,  r-ஐ,  c-ஒ,  x-ஓ,  z-ஔ, f-ஃ
மெய் எழுத்துக்கள் பதிந்துள்ள ஆங்கில எழுத்துக்கள் கீழ்கண்டவாறு;-
h-க  b-ங  [-ச  ]-ஞ  o-ட  p-ண  l-த  ;ந  j-ப  k-ம  ‘-ய  m-ர  n-ல  v-வ  /-ழ  y-ள  u-ற  i-ன

உதாரணம்;-
(1) ‘’தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’’ (2) தாளவாடி (3)ஈரோடு மாவட்டம்’’  = என்று தட்டச்சு செய்வதாக இருந்தால்
 (1)  த்+ ம்+ ழ்+ ந்+ ட்+     ற்+ வ்+  ய்+  ல்+   ய்+  க்+ க்+  ம்+   அதாவது la ks /f ;q od a us vs ‘a nf s ‘a hf ha kf என தட்டச்சு செய்தால்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -எனப் பதிவாகும். பரிசோதனை செய்து பார்க்கவும்.

(2)  த்+ஆ ள்+அ வ்+ஆ ட்+இ அதாவது lq ya vq os என்று தட்டச்சு செய்தால்- தாளவாடி – எனப் பதிவாகும்.

(3) ஈ ர்+ஓ  ட்+உ  ம்+ஆ  வ்+அ ட்+ஃ  ட்+அ  ம்+ஃ  அதாவது w mx od kq va of oa mf  என்று தட்டச்சு செய்தால் –ஈரோடு மாவட்டம்- எனப் பதிவாகும்.
 ஆக உயிர் எழுத்துக்கள்- 12 ம் மெய்யெழுத்துக்கள்-18 ம் மனதில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது.மிக எளிமையாக தமிழில் இலக்கணமுறைப்படி தட்டச்சு செய்யலாம். (முப்பது எழுத்துக்கள் மனப்பாடம் செய்ய முடியாதா? சிந்தியுங்கள்.)

Formation
Compound form
க் +
க் +
கா
க் +
கி
க் +
கீ
க் +
கு
க் +
கூ
க் +
கெ
க் +
கே
க் +
கை
க் +
கொ
க் +
கோ
க் +
கௌ




மெய்யெழுத்துக்களுடன் உயிரெழுத்துக்களை சேர்த்து தட்டச்சு செய்யும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்கள் அட்டவணை கீழே காண்க;-

Tamil compound table     
Vowels
Consonants
க்
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ங்
ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
ச்
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ஞ்
ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
ட்
டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
ண்
ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
த்
தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
ந்
நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
ப்
பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
ம்
மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
ய்
யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
ர்
ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
ல்
லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
வ்
வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
ழ்
ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
ள்
ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ
ற்
றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ
ன்
னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ























Grantha compound table
Vowels
Grantha consonants













ஜ்
ஜா
ஜி
ஜீ
ஜு
ஜூ
ஜெ
ஜே
ஜை
ஜொ
ஜோ
ஜௌ
ஷ்
ஷா
ஷி
ஷீ
ஷு
ஷூ
ஷெ
ஷே
ஷை
ஷொ
ஷோ
ஷௌ
ஸ்
ஸா
ஸி
ஸீ
ஸு
ஸூ
ஸெ
ஸே
ஸை
ஸொ
ஸோ
ஸௌ
ஹ்
ஹா
ஹி
ஹீ
ஹு
ஹூ
ஹெ
ஹே
ஹை
ஹொ
ஹோ
ஹௌ
க்ஷ்
க்ஷ
க்ஷா
க்ஷி
க்ஷீ
க்ஷு
க்ஷூ
க்ஷெ
க்ஷே
க்ஷை
க்ஷொ
க்ஷோ
க்ஷௌ



தமிழ் எண்கள்

0
1
2
3
4
5
6
7
8
9
10
100
1000

day
month
year
debit
credit
as above
rupee
numeral