வாழு,வாழவிடு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.

அன்புநண்பர்களே,வணக்கம்.
    இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்துள்ள தங்களை வருக!வருக!! என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-(தாளவாடி) ஈரோடு மாவட்டம் சார்பாக வரவேற்கிறோம்.

என்னைப் பற்றி


விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.

     AIPSN-All India People's Science Network-என்னும்  அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினராகவும்  BGVS-Bharat Gyan Vigyan Samiti -Delhi அமைப்பிலும் உறுப்பினராக உள்ளேன்.

   NCSTC- National Council For Science & Technology Communication - என்னும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.

   1980 முதல் செயல்பட்டு வரும் TNSF ஆகிய நான் தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றிவருகிறேன். 

      மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 

   தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று உள்ளேன். 

       கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறேன்.

       மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும், சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும், சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளேன்.

      இந்த விவரங்களெல்லாம் படிக்கும்போது நீங்களும் அறிவியல் இயக்கத்தில் இணைந்து சமூக சேவை புரிய ஆர்வமா? மிக எளியவழிதான். 

     உங்களுக்கு அருகில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளையை அணுகுவீர்.வருடச் சந்தா ரூபாய் இருபது மட்டும் செலுத்தி உறுப்பினராகுவீர். 

     அதன்பிறகு வருடம் இருநாளாவது சமூகத்தொண்டாற்றுவீர்.அறிவியல் பற்றிய செய்திகள் பல தெரிந்து கொள்வீர்.

    மேலும் சந்தேகமா? எங்களுக்கு command இல் பதிவிடுவீர். அல்லது  எங்களது மின்னஞ்சலில் தொடர்பு கொள்வீர்.உங்களுக்கு  நாங்கள் உதவுகிறோம்.என

    TAMILNADU SCIENCE FORUM THALAVADI-ERODE-TAMILNADU.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக