வாழு,வாழவிடு.

புதன், 28 செப்டம்பர், 2011

இந்திய ஆசிரியர் தினம்.&ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு

      SEP-05- இந்திய ஆசிரியர் தினம்.

ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?


நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .


இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.


ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம்.

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,


என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,


ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.



தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.


புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.


கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.


தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.


இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.


அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.


இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம். 

 ====================================================================

வெள்ளி, ௨௮ அக்டோபர், ௨௦௧௧

6-வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2011 /தமிழகத்திலிருந்து 27 ஆசிரியர்கள் தேர்வு


மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவற்றோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அளவில் நடத்தக்கூடிய,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வே தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு. கடந்த 2003 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் இம்மாநாடு அறிவிக்கப்படும். இந்த ஆண்டிற்கான பொதுத்தலைப்பாக அறிவியல் கல்வியின் போக்கும் புதிய சவால்களும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவியல் பாடம் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதுமைகள், அறிவியல் பாடங்களுக்கு இடையிலான உட்தொடர்பு,வேதியியலும் தரமான வாழ்க்கையும் ஆகியன துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில் அதிக அளவிலான ஆசிரியர்களைப் பங்கேற்க வைக்கும்பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (தென்மண்டலத்தில் தேனி,மதுரை ஆகிய இடங்களில்)பயிற்சி முகாம்களும், கலந்துரையாடல் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதன்விளைவாக தமிழகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் ஆசிரியர்களால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் நேபாளம்,வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும்கூட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்மாநாடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதையும் அறியலாம். இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ந்தேதி மாநாட்டிற்கு தேர்வான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக தேர்வான ஆய்வறிக்கைகள் விபரம்: அந்தமான்,நிக்கோபார், மேகாலயா, காஷ்மீர், மிசோரம் தலா-1, இமாச்சல்-2, அசாம்-3, குஜராத்-3, சதீஸ்கர்-4, கர்நாடகா, பஞ்சாப் தலா-5, கேரளா-6, ஜார்கண்ட்-7, ம.பி, சண்டிகர்-8, இராஜஸ்தான்-9, மேற்கு வங்காளம்-10, டெல்லி, கோவா-11, பிகார்-13, பாண்டிச்சேரி-14, உ.பி-16, உத்தரகாண்ட்-19, ஹரியானா-19, மஹாராஷ்டிரா-22, தமிழகம்-27, ஆந்திரா-52, ஒரிசா-67,நேபாளம்-1, வங்கதேசம்-1.
 
தமிழகத்திலிருந்து தேர்வான ஆசிரியர்கள் விபரம்:
S. No.TITLE OF PAPERSub-ThemeOral/Poster [O/P]STATEAUTHORS/ADDRESSES
XXIV.



1Biotechnology For Rust Free Iron Metal surfaceIIIOTamil NaduDr. S. Rajendran, Unit. Of Rural Biotechnology, Deptt. Of Botany, Saraswathi Narayanan College, Madurai, Tamilnadu, Pin- 625022
2Application of Remote Sensing Data in Land use and Land Cover StudiesIIOTamil NaduDr. V.Emayavaramban, Associate Professor, Deptt. Of Geography, School of Earth and Atmospheric Sciences, Madurai Kamaraj University, Madurai, Tamil Nadu- 625021
3Herbal Hair DryIIIPTamil NaduProf. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
4Real Education Must Embrace Our Daily LifeIIOTamil NaduP.Rajan, Abraham James Memorial Matric School, Gnaram Vilai, Pacode Post, Kanya Kumari Distt., Tamilnadu, Pin- 629168
6Effect of Yogasanas on Reducing Obesity in School ChildrenIIOTamil NaduV.Ganesan, Principal, Satchidananda Jothi Nikethan, Matric Higher Secondery School, Kallar, Mettupalayam, Coimbatore, TamilNadu, 641 305
9Utilising the Natural Resources to Remove Metal Ions in Waste WaterIPTamil NaduMr.S.Elamaran, Pappunaykkanpatti, Peraiyur Taluk, Madurai District, Tamil Nadu, Pin- 625 708
11Science Education ActivityIPTamil NaduMr. M. Pandiarajan, Teacher, 10C, RMC Colony 2nd Street, Muthupatti, Madurai, Tamilnadu, Pin-625003
12Household Chemical - Body Care ProductsIIIOTamil NaduProf. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
13Food Processing and PreservationIIIOTamil NaduMr. T. J. Nagendran, Murugappa Nagar, Third Cross Street, Tiruttani, Tiruvallur District, Tamil Nadu, Pin- 631 209
14Chemical Science and Quality of Life.IIIOTamil NaduK. Mahamudha, W/o, M.Abubacker Siddia, 6-2-48, Nagalapuram, (Near R.J. Office) Batlagundu, Dindugal (D.T.) Tamilnadu,
15Geography as an interdisciplinary and correlating scienceIIPTamil NaduG. Thirumoorthy, Asst. Prof., Vinaya Mission's College of Education, Kirumampakkam, Puducherry, Tamilnadu,Pin-607402
17Effluent - A Remedial MeasureIIIPTamil NaduJ.Sheela Grace, Sachidhanandha Jothi Nikethan, Kallar, Mettupalayam, Coimbatore, Tamil nadu- 641305
18Innovation techniques in teaching - learning of physicsIOTamil NaduSenthilkannan K, Astt. Prof.& Head Incharge, Dept. of Physics, School of Engineering, Vels University, Pallavaram, Chennai, State: Tamil Nadu
194 Steps of enhance learning outcomesIOTamil NaduRachna Lakshminarayanan, C-6, Green Gardens, Nabard Officers Quarters, No.-8 Cenotaph Road, Teynampet, Chennai, Tamil Nadu, 600018
20Effectiveness of software package to write tamil lesson plan for B.Ed. Students- TeachersIPTamil NaduDr. S. K. Panneer Selvam, Asst. Prof. Dept. of Education, Bharathidasan University, Trichy, Tamil Nadu.
21Challenges in imparting science education to the differently abledIOTamil NaduDr. P. Iyamperumal, Executive Director, Tamilnadu Science and Technology Center, Gandhimandapm Road, Chennai, Tamil Nadu,-600025
22Hygiene, Heath and Environment Science.IIIPTamil NaduS.Murugesan, Tamil Nadu Science Forum, E 9/24, TNHB, Bagalpur Hutco, Hosur, Krishnagiri Dt., Tamilnadu, Pin-635109
23Carbon Capture Using Genetically Engineered BacteriaIIIPTamil NaduDr. V. Sukumaran, Dept. of Biotechnology, Periyar Maniammai University, Thanjavur, Tamil Nadu, Pin-613403
24Green Chemistry in generating minimum waste and utlising minimum energyIIIOTamil NaduDr. T. Senthilnathan, Professor, Dept. of Phisics, Velammal Engineering College, Chennai, Tamil Nadu, Pin-600066
25Effectiveness of cooperative learning in biology for standard XI studentsIOTamil NaduDr. R. Annakodi, Associate Professor, Dept. of Education Avinashilingan Instt. For Home Sciuence and Higher Education, Varpalauam, Thadagam-P.O.. Coimbatore-108, TamilNadu
26Study of Science Experiments prescribed in Tamil Nadu State Science Text Book.IOTamil NaduM. Pandiarajan, Teacher, Champak Nurcery and Primary School, Muthuppatti, Madirai, Tamil Nadu, Pi-625003
27Monitoring and Measurement Opportunities of Food Contaminants Through Process ApproachIIIOTamil NaduProf. Dr. Vijayan Gurumurthy Iyer, Principal, Prince Dr. K. Vasudevan College of Engineering & Technology, 9 B, Block-II, Rathna Nagar Road, Virugambakkam, Chennai-92, Tamil Nadu
தேர்வான ஆசிரியர்களுக்கு நவம்பர்,8ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வான ஆய்வுக்கட்டுரைகள் தேசிய அளவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது. போக்குவரத்து, தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் பணிமேல் அனுமதியுடன் கல்ந்துகொள்ளலாம். தமிழகத்திலிருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

அறிவியல் வணக்கங்களுடன்...
தே.சுந்தர்,தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்,
ஆசிரியர் இணையம்&ஆசிரியர் அறிவியல் மாநாடு
நன்றி !
தேனீ மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக