வாழு,வாழவிடு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அறிவியல்

  அன்பு நண்பர்களே, 
       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவிற்கு தங்களை வருக! வருக!! என வரவேற்கிறோம்.

      அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவின் அடிப்படையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. 

      ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. 
      இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்கு உணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.             துறைகள்
    இயற்கை அறிவியல்
         அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் ஆகியவற்றையே சிறப்பாக குறிக்கிறது. இவை இயற்கை அறிவியல் என்று இப்போது அறியப்படுகின்றன. 
      இயற்கை அறிவியலில் ''கணிதம்'' பன்முக வலுவோடு பயன்படுகிறது. இவை பற்றி துல்லியமாக புறவயமாக ஆராய முடிவதால் இவற்றை வலு அறிவியல் துறைகள் (hard sciences) என்கின்றனர்.
     Formal Sciences
கணிதம் கணினியியல் மொழியியல் முறைமையியல்
சமூக அறிவியல்
சமூகவியல், மானிடவியல், அரசறிவியல், பொருளியல் போன்ற துறைகள் சமூக அறிவியல் துறைகள் ஆகும். இத்துறைகளில் மனிதர் தொடர்புடையவை. அகம் தொடர்புடையவை. ஆகையால் அறிவியல் முறைமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, உறுதியான கோட்பாடுகளை உருவாக்குவது சிரமமானது.
செயல்முறை அறிவியல்அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் ,இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (Techniques) ஆகும். 
       அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். செயல்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அந்த ஆதாரங்கள் பகுத்தறிவு ஆய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக