வாழு,வாழவிடு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

காவல்துறை-பணிக்கேற்ற குறியீடுகள்

         காவல்துறை-பணிக்கேற்ற குறியீடுகள்

அன்பு நண்பர்களே, 
       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவிற்கு வருக!வருக!!என வரவேற்கிறோம்.
    
     இந்தப்பதிவில்  தமிழ்நாடு காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு  அவர்கள்'' பணிக்கேற்ற குறியீடுகள்'' பற்றி தெரிந்து கொள்வோம்.       

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

 பதவி

பதவிச் சின்னம்

காவல்துறைத் தலைமை இயக்குனர்அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர்ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர்அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர்மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர்மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர்இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர்சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர்சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர்பட்டை எதுவுமில்லை.

சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக